முன் தொடக்கம்

இந்த பக்கமானது React தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களின் கண்ணோட்டம் ஆகும்.

React ஒரு பயனர் இடை முகப்பை உருவாக்குவதற்கான JavaScript நிரல் நூலகம் ஆகும். React என்பது என்னவென்று அறிந்து கொள்ள எமது முகப்பு அல்லது பயிற்சிக்கு செல்க.


React முயற்சி செய்ய

React ஆனது ஆரம்பம் முதலே படிப்படியாக ஏற்றுக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டது, மேலும் நீங்கள் கொஞ்சமாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்பவவோ React ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் React இன் சுவையை பெற, HTML பக்கத்தில் சில பரிமாற்றத்தை சேர்க்கவோ, அல்லது ஒரு சிக்கலான React ஆல் இயங்கும் பயன்பாட்டை தொடங்க, இந்த பகுதியில் உள்ள இணைப்புகள் உதவும்.

நிகழ்நிலை ஆடுகளங்கள்

நீங்கள் React உடன் விளையாட விருப்பப்பட்டால், பின்வரும் சில நிகழ்நிலை ஆடுகளங்களை பயன்படுத்தலாம். Hello World வார்ப்புருவை முயற்சி செய்ய CodePen, CodeSandbox, or Glitch.

உங்கள் சொந்த உரை திருத்தியை விரும்பினால், நீங்கள் இந்த HTML கோப்புவை பதிவிறக்கம் செய்து, திருத்தும் செய்து, மற்றும் உங்கள் உலாவியில் உள்ளூர் கோப்பு அமைப்பிலிருந்து திறக்கவும். இது மெதுவாக இயங்கும் தன்மை மாற்றத்தை செய்கிறது, எனவே இதை எளிய செய்முறைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

React ஐ வலைப்பக்கத்தில் சேர்க்க

நீங்கள் ஒரு நிமிடத்தில் React ஐ உங்கள் HTML பக்கத்தில் சேர்க்க முடியும். நீங்கள் படிப்படியாக அதன் இருப்பை விரிவுபடுத்தலாம், அல்லது அதை சில ஆற்றலுள்ள நிரல்துண்டுகளாக(widgets) வைத்திருக்கலாம்.

ஒரு புதிய React பயன்பாட்டை உருவாக்க

React இல் ஒரு பணியை (project) தொடங்கும் போது, script tags உடன் ஒரு சிறிய HTML பக்கம் சிறந்த தேர்வாக இருக்கலாம். இதை அமைக்க ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது!

உங்கள் பயன்பாட்டின் தன்மையை பொறுத்து நீங்கள் உங்களுடைய React செயலியை (application / project) கட்டமைக்க வேண்டும், இங்கே நாங்கள் சிலவற்றைபரிந்துரை செய்கின்றோம் மேலும் அறிந்துகொள்ள. அவை ஒவ்வொன்றும் பெரியளவில் கட்டமைப்பில் மாற்றங்களை செய்யாது பயன்படுத்தக் கூடியவை அத்தோடு அவை தொடர்பான உதவிகளை நீங்கள் எங்கள் React தொடர்பான சமூக அமைப்புக்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

React கற்க

மக்கள் React ஐ கற்க பல்வேறு பின்னணியில் இருந்தும் வெவ்வேறு கற்றல் பாணிகளில் இருந்தும் வந்திருக்கலாம். நீங்கள் இன்னும் தத்துவார்த்த அல்லது நடைமுறை அணுகுமுறைக்கு விரும்புகிறீர்களோ இல்லையோ, இந்த பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக நம்புகிறோம்.

எந்தவொரு அறிமுகமில்லாத தொழில்நுட்பத்தைப் போல, React ஐ கற்க ஒரு கற்றல்வரை உண்டு.உங்களால் பயிற்சி மற்றும் பொறுமையால் கற்க முடியும்.

முதல் எடுத்துக்காட்டுகள்

இந்த React முகப்பு ஒரு சில சிறிய React எடுத்துக்காட்டுகளை நேரடி உரை திருத்தியுடன் கொண்டுள்ளது. நீங்கள் React பற்றி எதுவும் தெரியாமல் இருந்தால் கூட, உரை திருத்தியில் உள்ள நிரலை மாற்றி அது விளைவை எப்படி பாதிக்கிறது என பார்க்க முடியும்.

React தொடங்குபவர்களுக்காக

React ஆவணங்கள், உங்கள் வசதியை விட வேகமாக நகர்கிறது என நினைத்தால், பாருங்கள் டானியா ராஷியாவின் React கண்ணோட்டம். இது ஒரு விரிவான, தொடக்க-நட்பு முறையில் மிகவும் முக்கியமான React கருத்துக்களை அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் முடித்துவிட்டால், இதை மற்றொரு ஆவண முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம்!

React வடிவமைப்பாளர்களுக்காக

நீங்கள் வடிவமைப்பு பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்றால், தொடங்குவதற்கு இந்த ஆதாரங்கள் ஒரு சிறந்த இடமாக அமையும்.

JavaScript ஆதாரங்கள்

React ஆவணமானது, நீங்கள் JavaScript மொழி நிரலாக்கத்தின் சில பழக்கங்களை கொண்டுள்ளீர்கள் என கருதுகிறது. நீங்கள் ஒரு நிபுணராக இருக்க தேவையில்லை, ஆனால் ஒரே நேரத்தில் React மற்றும் JavaScript ஐ கற்றுக்கொள்வது மிகவும் கடினமானது ஆகும்.

உங்கள் அறிவின் அளவைப் பரிசோதிக்க இந்த JavaScript கண்ணோட்டத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் நீங்கள் React ஐ கற்றுக்கொள்ள இன்னும் நம்பிக்கையான உணர்வை பெறுவீர்கள்.

குறிப்பு

உங்களுக்கு JavaScript இல் எதாவது குழப்பம் ஏற்படும் போது அதை சரிபார்க்க, MDN மற்றும் javascript.info ஆகியவை சிறந்த வலைத்தளங்கள் ஆகும். மேலும் நீங்கள் உதவி பெற சமூக ஆதரவு கருத்துக்களம் இருக்கின்றது.

செய்முறை பயிற்சி

செய்முறை மூலமாக கற்றலை விரும்பினால் எங்கள் செய்முறை பயிற்சியை பாருங்கள். இந்த பயிற்சியில், நாம் React மூலமாக tic-tac-toe விளையாட்டை உருவாக்குவோம். நீங்கள் விளையாட்டுகள் உருவாக்கத்தை செய்யாதிருப்பதால், இதை தவிர்க்க ஆசைப்படலாம் — ஆனால் அதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். நீங்கள் இந்த பயிற்சியில் கற்றுக்கொள்ளும் நுட்பமானது எந்தவொரு React பயன்பாட்டையும் உருவாக்கும் அடிப்படை திறனை கொடுக்கிறது, மேலும் இதில் தேர்ச்சி பெற்றால் இது மிகவும் ஆழ்ந்த புரிதலை தரும்.

படிப்படியான வழிகாட்டி

படிப்படியான கருத்துருக்கள் கற்றலை விரும்பினால், தொடங்குவதற்கு எமது முக்கிய கருத்துருக்கள் வழிகாட்டி ஒரு சிறந்த இடம். ஒவ்வொரு அடுத்த அத்தியாயமும் முந்தைய அத்தியாயங்களில் அறிமுகப்படுத்திய அறிவை வளர்த்துக்கொள்கிறது, எனவே நீங்கள் எங்கு சென்றாலும் எதையும் இழக்க மாட்டீர்கள்.

React ஐ சிந்தித்துப்பாருங்கள்

பல பயனர்கள் React சிந்தனையை படித்து நன்மதிப்பை பெற்றதோடு கடைசியாக அத்தருணத்தில் அவர்கள் “தெளிவை” பெற்றனர். இது அனேகமாக பழமையான React உலாவாக இருக்கலாம் ஆனால் இது இன்னும் பொருத்தமானது.

மக்கள் சில சமயங்களில் மூன்றாம் தரப்பு புத்தகங்கள் மற்றும் காணொளி ஆவணங்கள் மிகவும் பயனுள்ளதாக கண்டறிகின்றனர். நாங்கள் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஆதாரங்களின் பட்டியலை பராமரிக்கிறோம், இதில் சில இலவசமாக உள்ளது.

மேம்பட்ட கருத்துருக்கள்

நீங்கள் முக்கிய கருத்துருக்களில் வசதியாகவும், React உடன் கொஞ்சம் விளையாடிய பிறகும், React மேம்பட்ட கருத்துருக்கள் உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம். இந்த பகுதி உங்களுக்கு சக்திவாய்ந்த, ஆனால் பொதுவாக குறைந்த அளவு பயன்படுத்தப்படும் context மற்றும் refs போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

API மேற்கோள்

ஒரு குறிப்பிட்ட React API பற்றிய மேலும் விவரங்களை அறிய, இந்த ஆவணப் பிரிவு பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, React.Component API மேற்கோள் எப்படி setState() வேலை செய்கிறதென்றும், வேறுபட்ட பயனுள்ள வாழ்க்கைச்சுழற்சி முறைமைகளை(lifecycle methods) பற்றிய விவரங்களையும் கொடுக்கிறது.

சொற்களஞ்சியம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)

இந்த சொற்களஞ்சியம் React ஆவணத்தில் மிக பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களின் கருத்துக்களை கொண்டிருக்கும். சிறிய கேள்விகள் மற்றும் பதில்கள் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட FAQ பகுதியில் பொதுவான React தலைப்புடன் AJAX கோரிக்கைகள் உருவாக்கம், React component state, மற்றும் கோப்பு அமைப்பு ஆகியவை பற்றிய கருத்துக்களும் இருக்கின்றன.

அறிவுப்புக்காக காத்திரு

React குழுவினரின் அதிகாரப்பூர்வமான மேம்படுத்தல் அறிவிப்புக்களுக்கு React வலைப்பதிவு ஒரு சிறந்த மூலம் ஆகும். வெளியீடு குறிப்புகள் அல்லது நீக்குதல் அறிவிப்புக்கள் உட்பட முக்கியமான பதிவுகள், முதலில் அங்கு இடுகையிடப்படும்

நீங்கள் Twitter இல் @reactjs கணக்கை பின்தொடரலாம், ஆனால் வலைப்பதிவை மட்டும் நீங்கள் வாசித்தாலே அத்தியாவசியமான எதையும் தவற விட மாட்டீர்கள்.

ஒவ்வொரு React பதிப்புக்களுக்கும் சொந்தமாக வலைப்பதிவு கிடையாது, ஆனால் ஒவ்வொரு பதிப்புக்களுக்குமான விரிவான மாற்ற பதிவுகளை React களஞ்சியத்தில் உள்ள CHANGELOG.md கோப்பிலும், வெளியீடுகள் பக்கத்திலும் காணலாம்.

பதிப்பு ஆவணமாக்கம்

இந்த ஆவணமாக்கம் எப்போதும் React இன் சமீபத்திய நிலையான பதிப்பை பிரதிபலிக்கும். React பதிப்பு 16 இல் இருந்து பழைய பதிப்புகளின் ஆவணங்களை தனிப்பக்கத்தில் காணலாம். புதிய பதிப்பு வெளியிடப்படும் நேரத்தில், கடந்த பதிப்புகளுக்கான ஆவணங்கள் நிழற்பட நொடிப்பெடுப்பு (snapshot) செய்யப்பட்டிருக்கின்றன, தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதில்லை.

தவறிய ஏதாவது?

ஆவணமாக்கத்தில் ஏதாவது தொலைந்திருந்தாலோ அல்லது சில பகுதி குழப்பமாக இருந்தாலோ, தயவுசெய்த உங்கள் மேம்பாடு கருத்துக்களுடன் ஆவணமாக்கம் களஞ்சியத்துக்கான பிரச்சினையை தாக்கல் செய்யவும் அல்லது Twitter இல் @reactjs கணக்கில் பதிவிடலாம். உங்கள் கருத்துக்களை நாங்கள் அன்புடன் கேட்கிறோம்!