CDN Links

CDN வழியாக React மற்றும் ReactDOM கிடைக்கப்பெறும்.

<script crossorigin src="https://unpkg.com/react@16/umd/react.development.js"></script>
<script crossorigin src="https://unpkg.com/react-dom@16/umd/react-dom.development.js"></script>

மேற்கண்ட பதிப்புகள் செயலுருவாக்கத்திற்கானது ( development ), முழுமையுற்ற ( production ) வழங்கிக்கானதல்ல. குறைத்து எளிமையாக்கப்பட்ட முழுமையான பதிப்பு கிடைக்குமிடம்:

<script crossorigin src="https://unpkg.com/react@16/umd/react.production.min.js"></script>
<script crossorigin src="https://unpkg.com/react-dom@16/umd/react-dom.production.min.js"></script>

‘react’ மற்றும் ‘react-dom’-ன் குறிப்பிட்ட பதிப்பை பெற, ‘16’-க்கு பதிலாக பதிப்பு எண்ணை மாற்றிக் கொள்ளவும்.

எதற்காக crossorigin பண்பு?

நீங்கள் CDN -லிருந்து React ஐ பெற்றால், crossorigin என்ற பண்பை இருக்குமாறு பார்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறோம்.

<script crossorigin src="..."></script>

நீங்கள் பயன்படுத்தும் CDN Access-Control-Allow-Origin: * என்ற HTTP தலைப்பை சேர்த்துள்ளதை உரிது செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

Access-Control-Allow-Origin: *

இது பதிப்பு 16-ம் அதற்கு பிறகான react-ன் பிழைகளை கையாளும் அனுபவத்தை எளிதாக்கும்.